Enable Javscript for better performance
குகை பகுதியில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 129 ஜோடி வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    குகை பகுதியில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 129 ஜோடி வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்

    By DIN  |   Published on : 28th March 2019 09:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் குகை லைன்மேடு பகுதியில், உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.1.43 லட்சம் மதிப்புள்ள 129 ஜோடி வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 
    மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள நிலையில்,  தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் பேரில், பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினர் 24 மணி நேரமும் தீவிர வாகனத்  தணிக்கை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 
    இந் நிலையில்,  புதன்கிழமை சேலம் தெற்கு தொகுதிக்கான உதவி தேர்தல் அலுவலர் மற்றும் ஆணையர் ரெ.சதீஷ் உத்தரவின் பேரில்,  குகை லைன்மேடு பகுதியில் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    இத் தணிக்கையின் போது, குகை பகுதியைச் சேர்ந்த ஆர்.ஆரிப் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 385 மதிப்புள்ள 3.475 கிலோ கிராம் எடையுள்ள 129 ஜோடி வெள்ளிக் கொலுசுகள் எடுத்துச் சென்றது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபரிடம்  உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து பொருள்களை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
    ஆய்வின் போது,  கூடுதல் உதவி தேர்தல் அலுவலர்கள் ம.சுந்தரராஜன்,  எஸ்.ஆனந்த யுவனேஷ் தலைமையிலான பறக்கும் படையினர்,  காவல் துறையினர், நிலை கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த அலுவலர்கள் உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.
    மாவட்டத்தில் ரூ.4.68 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்:  சேலம் மாவட்டத்தில் கடந்த மார்ச் 11-ஆம் தேதி முதல் புதன்கிழமை வரை ரூ.4.68 கோடி பணம், வெள்ளிப் பொருள்கள், சேலைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai