Enable Javscript for better performance
குடிநீர்த் தட்டுப்பாடு: காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    குடிநீர்த் தட்டுப்பாடு: காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 28th March 2019 09:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தம்மம்பட்டி அருகே வாழக்கோம்பையில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பெண்கள் காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கெங்கவல்லி ஒன்றியம் ஜங்கமசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்டது வாழக்கோம்பை கிராமம். இங்கு 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். வாழக்கோம்பையில் கடந்த ஒரு மாதமாக கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆழ்துளைக்கிணறுகளில் இருந்த மோட்டாரும் பழுதடைந்து விட்டதாம். இதனால், பொதுமக்கள் குடிநீருக்காக தவித்து வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
    இந்நிலையில், புதன்கிழமை வாழக்கோம்பை பேருந்து நிறுத்தம் முன் 60-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல், கிராம நிர்வாக அலுவலர் சடையன், ஊராட்சி செயலர் ராமசாமி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உடனடியாக காவிரி குடிநீரை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு அனுப்புவதாகவும், இரண்டு நாளில் ஆழ்துளைக் கிணறு மின்மோட்டார் பழுதுநீக்கி, குடிநீர் விநியோகத்தை சீரமைப்பதாகவும் உறுதியளித்ததையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai