கே. புத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு அரசுப் பேருந்து இயக்கக் கோரிக்கை
By DIN | Published On : 28th March 2019 09:39 AM | Last Updated : 28th March 2019 09:39 AM | அ+அ அ- |

ஏற்காடு வாழந்தி ஊராட்சிக்குள்பட்ட கே. புத்தூர், அரண்மனை காடு, புளிங்கடை, பாரக்கடை, மோட்டுக் காடு, சேட்டுக்காடு உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 350 குடும்பங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைக் கிராம மக்கள், முதியோர் , காபி தோட்ட கூலித் தொழிலார்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் வசித்து வருகின்றனர்.
இக் கிராமங்களுக்கு தார்சாலை வசதி செய்யப்பட்டு சில வருடங்கள் ஆகியும் பேருந்து வசதி இல்லாததால் பேருந்து ஏறுவதற்கு கீரைக்காடு, வாழவந்தி கிராமத்துக்கு நடைபெற்று வரும் நிலையுள்ளது. போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இக் கிராமங்களுக்கு அரசுப் பேருந்துகளை கே. புத்தூர் முதல் வாழவந்தி அரசு மருத்துவமனை வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.