Enable Javscript for better performance
கொங்கணாபுரம் கால்நடைச்சந்தையில் கால்நடைகள் விற்பனை மந்தம்- Dinamani

சுடச்சுட

    

    கொங்கணாபுரம் கால்நடைச்சந்தையில் கால்நடைகள் விற்பனை மந்தம்

    By DIN  |   Published on : 28th March 2019 09:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், கொங்கணாபுரம் கால்நடை சந்தையில், கால்நடைகளின் விற்பனை குறைந்துள்ளது.
    எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் புகழ்பெற்ற கால்நடை சந்தை உள்ளது. வாரந்தோறும்  சனிக்கிழமை அன்று நடைபெறும் இச் சந்தையில், ஆடு, மாடு, கோழிகள், சண்டைசேவல் மற்றும் பந்தையபுறா என பல்வேறு கால்நடைகள் அதிக எண்ணிக்கையில் விற்பனைக்கு வருவது வழக்கம்.
    தமிழகம் மட்டுமன்றி ஆந்திரம், கேரளம்,  கர்நாடகம் உள்ளிட்ட  அண்டை மாநில வியாபாரிகளும் இக் கால்நடை சந்தைக்கு வந்து இங்கு விற்கப்படும் கால்நடைகளை வாங்கிச் செல்கின்றனர்.
    இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள்
    அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட தொகைக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி வெளி இடங்களுக்குச் செல்ல முடியாத நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற கொங்கணாபுரம் கால்நடை சந்தைக்கு, வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகள் வருகை மிக சொற்ப எண்ணிக்கையில் இருந்த காரணத்தால், கால்நடை வியாபாரம் மந்தமாகவே காணப்பட்டதாக விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.
    வழக்கமாக நடைபெறும் வாணிபத்தில் மூன்றில் ஒரு பங்கு அளவே கால்நடை வியாபாரம் நடைபெற்றதாக சண்டைசேவல் வியாபாரி ரமேஷ் தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai