Enable Javscript for better performance
"சங்க இலக்கியங்கள் தமிழ் மொழிக்கு கிடைத்த பொற்குவியல்'- Dinamani

சுடச்சுட

    

    "சங்க இலக்கியங்கள் தமிழ் மொழிக்கு கிடைத்த பொற்குவியல்'

    By DIN  |   Published on : 28th March 2019 09:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சங்க இலக்கியங்கள் தமிழ் மொழிக்கு கிடைத்த பொற்குவியல்களாகும் என பேச்சாளர் சரளாதேவி கூறினார்.
    சேலத்தில் தமிழ்ச் சங்கம் சார்பில் அண்மையில் இலக்கிய விழா நடைபெற்றது. விழாவுக்கு சங்கத் தலைவர் சீனி.துரைசாமி தலைமை வகித்தார். செயலர் வரத.ஜெயக்குமார் வரவேற்புரையாற்றினார். 
    சிறப்பு விருந்தினராக பேச்சாளர் சரளாதேவி கலந்துகொண்டு, நமது சங்க இலக்கியங்கள் காட்டும் நினைவூட்டலும், மகிழ்வூட்டலும் என்ற தலைப்பில் பேசியது: தமிழ் மொழி நமக்கு அளித்த பண்பாட்டையும், இலக்கணங்களையும் நாம் மறந்து வருகிறோம். மனிதன் தடம் மாறி நச்சு மரமாக மாறி போகிறான்.
    இலக்கியம் என்றால் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, தொல்காப்பியர், பவனந்தி முனிவர் போன்ற சான்றோர்கள் தமிழில் எழுதியது போல் கடினமாக இல்லாமல் எளிமைப்படுத்தி படித்துணர வேண்டும். குறிப்பாக பெண்கள் இலக்கியங்களை படிக்க வேண்டும்.
    மேலும், மகிழ்வான வாழ்க்கைக்கு படைக்கப்பட்டது தான் திருக்குற்றால குறவஞ்சி ஆகும். இளைய தலைமுறைகளுக்கு பாரதி எழுதிய பாடல் தான் பாப்பா பாட்டு ஆகும். மேலும், பெண்களின் தைரியத்துக்கு எடுத்துக்காட்டுதான் பாஞ்சாலி சபதம் ஆகும். துன்பத்தில் வாழும் மக்கள், அறக் கருத்துகளை வலியுறுத்தும் இலக்கியங்களை மனதில் நிறுத்தினால் துன்பங்கள் பறந்து போவதுடன், ஆனந்த வாழ்வை வாழமுடியும்.
    சங்க இலக்கியங்கள் தமிழ் மொழிக்கு கிடைத்த பொற்குவியல்களாகும். தமிழ் இலக்கியங்கள், தமிழ் சொற்கள் மிகவும் அற்புதமானவை. தமிழ் இலக்கியங்களை நமது குழந்தைகளுக்கும், குடும்பத்துக்கும் தெளிவுபடுத்தி, அனைவரும் பின்பற்றி நடந்தால் வன்முறை இல்லாத வாழ்வை நாம் அனைவரும் வாழ முடியும் என்றார். விழாவில் ஏராளமான இலக்கிய ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai