Enable Javscript for better performance
சேலம் மக்களவைத் தொகுதியில் 25 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு- Dinamani

சுடச்சுட

    

    சேலம் மக்களவைத் தொகுதியில் 25 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு

    By DIN  |   Published on : 28th March 2019 09:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்த 25 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
    சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட 37 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனிடையே புதன்கிழமை வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில், சேலம் மக்களவைத் தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் ராஜேஷ் மஞ்சு முன்னிலையில், ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தலைமையில் வேட்பாளர்கள், முகவர்கள் பங்கேற்றனர்.
    25 வேட்பாளர்களின் மனுக்கள் 
    ஏற்பு: சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட 37 வேட்பாளர்கள் 47 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதில் 12 வேட்பாளர்களின் 22 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தற்போது 25 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்பு மனுக்களை திரும்பப் பெற மார்ச் 29-ஆம் தேதி கடைசி நாளாகும். அதைத் தொடர்ந்து மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
    அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி: சேலம் மக்களவைத் தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த சடையன், அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன், திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
    பதிவு செய்த அரசியல் கட்சி - சுயேச்சைகள்: அதேபோல பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களில் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சிலம்பரசன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரபு மணிகண்டன், சோசலிஸ்ட் யூனிட்டி ஆப் இந்தியா (கம்யூனிஸ்ட்) வேட்பாளர் பெ.மோகன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அ.ராசா உள்ளிட்ட 4 பேர் அடங்குவர்.
    இதுதவிர்த்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் எஸ்.கே.செல்வம் உள்பட 18 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. மொத்தம் 25 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேட்புமனு நிரகாரிப்பால் தர்னா: இதனிடையே, பாமகவில் இருந்து வந்து சுயேச்சையாக போட்டியிட விருப்பம் தெரிவித்த ஏ.பி.குமார் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் வேட்புமனு பரிசீலனையில் ஏ.பி.குமாரின் மனுவில் படிவம் 26-இல் முழுமையாக பூர்த்தி செய்யாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மனு நிராகரிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதையடுத்து, மனுவை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தி, ஏ.பி.குமார் திடீரென தர்னாவில் ஈடுபட்டார். இது தொடர்பாக அவர் கூறுகையில், என்னுடைய மனுவை நிராகரிக்க காரணமான அதிமுக, பாமக ஆகிய கட்சிகளை எதிர்த்து பிரசாரத்தை தொடங்குவேன். அதிமுகவுடன் கூட்டணி வைத்ததை எதிர்க்கும் விதமாக, பாமகவில் இருந்து வெளியே வந்து சுயேச்சையாக போட்டியிட மனு செய்தேன் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai