Enable Javscript for better performance
"தேர்தல் பொதுப் பார்வையாளரை கட்சியினர்,பொதுமக்கள் சந்திக்கலாம்'- Dinamani

சுடச்சுட

    

    "தேர்தல் பொதுப் பார்வையாளரை கட்சியினர்,பொதுமக்கள் சந்திக்கலாம்'

    By DIN  |   Published on : 28th March 2019 09:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் ராஜேஷ் மஞ்சுவை, அஸ்தம்பட்டி கூடுதல் சுற்றுலா மாளிகையில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் நாள்தோறும் நேரில் சந்திக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சேலம் மக்களவைத் தொகுதியைக் கண்காணித்திட மத்திய குஜராத் விஜ் கம்பெனி லிட் மேலாண் இயக்குநராக பணியாற்றி வரும் ராஜேஷ் மஞ்சு, தேர்தல் பொதுப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 
    தேர்தல் பொதுப் பார்வையாளரின் செல்லிடப்பேசி எண்-63804 39582, இரும்பாலை முகாம் அலுவலக தொலைபேசி எண்-0427 2383665 மற்றும் மின்னஞ்சல் முகவரி  ‌ob‌s‌e‌r‌v‌e‌r15‌s​a‌l‌e‌m@‌g‌m​a‌i‌l.​c‌o‌m  ஆகும். 
    சேலம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட தேர்தல் தொடர்பான புகார்களை மேற்குறிப்பிட்டுள்ள செல்லிடப்பேசி, தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். 
    சேலம் சாரதா கல்லூரி சாலை அஸ்தம்பட்டியில் உள்ள கூடுதல் சுற்றுலா மாளிகை அறை எண் 1-இல் தேர்தல் பொதுப் பார்வையாளரின் முகாம் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, சேலம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட வேட்பாளர்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் நாள்தோறும் காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை முகாம் அலுவலகத்தில் தேர்தல் பொதுப் பார்வையாளரை நேரில் சந்தித்து தேர்தல் தொடர்பான தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ரோகிணி ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai