சேலத்தில் காற்றுடன் பலத்த மழை: மாட்டுக் கொட்டகை சரிந்து மூதாட்டி பலி

சேலத்தில் செவ்வாய்க்கிழமை இரவு காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக மாட்டுக் கொட்டகை சரிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்தார்.

சேலத்தில் செவ்வாய்க்கிழமை இரவு காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக மாட்டுக் கொட்டகை சரிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்தார்.
சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணம் மேட்டுப்பட்டி தாதனூரை சேர்ந்தவர் வெள்ளையம்மாள் (80). இவர் தனது வீட்டருகே சிமென்ட் கூரை மூலம் கொட்டகை அமைத்து நான்கு மாடுகளை வளர்த்து வந்தார். 
இதனிடையே, செவ்வாய்க்கிழமை இரவு காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, மாட்டுக் கொட்டகை ஓரத்தில் வெள்ளையம்மாள் படுத்திருந்தார் என தெரிகிறது. மேலும், அவரது உறவினர்கள் ஜெயா, அம்மணி அம்மாள் ஆகியோரும் அமர்ந்து மூதாட்டியுடன் பேசிக் கொண்டிருந்தனராம். அப்போது, திடீரென வீசிய பலமான சூறைக் காற்றில் மாட்டுக் கொட்டகை சரிந்து விழுந்தது.
இதில் படுகாயமடைந்த மூதாட்டி வெள்ளையம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு மாடும் பலியானது. இச்சம்பவத்தில் உறவினர்கள் இருவரும் லேசமான காயமடைந்தனர். 
தகவல் அறிந்த வீராணம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை மீட்டனர்.
ஏற்காட்டில் 34 மி.மீ. மழை: சேலத்தில் புதன்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): ஏற்காடு-34, ஆனைமடுவு-29, சேலம் -27, ஓமலூர்-26, வாழப்பாடி-22, காடையம்பட்டி-11, கரியகோவில்-5, பெத்தநாயக்கன்பாளையம்-2 மில்லி மீட்டர் என மாவட்டத்தில் மொத்தம் 156 மில்லி மீட்டர் மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com