Enable Javscript for better performance
சேலம் நகரில் கடந்த 4 மாதங்களில் 5 ஆயிரம் புகார் மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை: காவல் ஆணையர் கே.சங்கர- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    சேலம் நகரில் கடந்த 4 மாதங்களில் 5 ஆயிரம் புகார் மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை: காவல் ஆணையர் கே.சங்கர்

    By DIN  |   Published On : 02nd May 2019 09:18 AM  |   Last Updated : 02nd May 2019 09:18 AM  |  அ+அ அ-  |  

    சேலத்தில் கடந்த 4 மாதங்களில் பொதுமக்களிடம் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என சேலம் மாநகர காவல் ஆணையர் கே.சங்கர் தெரிவித்தார்.
    சேலம் மாநகர் பகுதியில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையிலும், பொதுமக்கள் தயக்கமின்றி புகார் அளிக்கும் வகையிலும் 18 காவல் நிலையங்களிலும் வரவேற்பு பிரிவு ஏற்படுத்தி அதற்கென வரவேற்பு காவலரை நியமித்து புகார் மனு பெறப்பட்டு வருகிறது. 
    இதனடிப்படையில், குடும்பத் தகராறு, வரதட்சிணை கொடுமை, வழிப்பறி,கொள்ளை, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு  புகார் மனுக்கள் பெறப்பட்டு, இந்த புகார் மனுக்கள் மீது சேலம் மாநகர காவல் ஆணையர் கே.சங்கர் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    இந்த நிலையில், சேலம் மாநகர காவல் துறை சார்பில் மனுதாரர்கள் குறைதீர்க்கும் முகாம் சேலம் கோட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை மாநகர காவல் ஆணையர் கே.சங்கர் தொடக்கி வைத்தார். இதில் சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான  பொதுமக்கள் கலந்துகொண்டு புகார் மனுக்களை வழங்கினர். 
    இதுகுறித்து சேலம் மாநகர ஆணையர் காவல் ஆணையர் கே.சங்கர் கூறியது: ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வரவேற்பு பிரிவு ஏற்படுத்தி பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் எந்தவொரு அச்சமின்றி, தயக்கமின்றி தங்களது குறைகளை காவலர்களிடம் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்தப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக கடந்த 4 மாதங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அந்த மனுக்கள் மீது பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக சேலம் மாநகரில் குற்றச் சம்பவங்கள் இல்லாத நிலை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்று மனுதாரர் முகாம் நடத்தப்படுகிறது. 
    இதுவரை 200-க்கும் மேற்பட்ட மனுதாரர்கள் தங்கள் அளித்த மனுக்களின் மீதான விசாரணை திருப்தியில்லை என தெரிவித்துள்ளனர். அந்த மனுக்கள் மீது மீண்டும் மறு விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp