தம்மம்பட்டியிலிருந்து சிறப்பு பேருந்து இயக்கக் கோரிக்கை
By DIN | Published On : 05th May 2019 05:27 AM | Last Updated : 05th May 2019 05:27 AM | அ+அ அ- |

தம்மம்பட்டியிலிருந்து கோடைவிடுமுறைக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆண்டு கோடை விடுமுறையைக் கருத்தில் கொண்டு தம்மம்பட்டி அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையிலிருந்து திருப்பதி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, கொடைக்கானல், உதகை, ஏற்காடு, வேலூர், செங்கோட்டை ஆகிய ஊர்களுக்கு சிறப்பு சுற்றுலா பேருந்துகளை இயக்க வேண்டும். இதன் மூலம் சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் பயனடைவர். அத்துடன் போக்குவரத்துக் கழகத்துக்கும் வருமானம் கிடைக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...