நூல் வெளியீட்டு விழா
By DIN | Published On : 10th May 2019 09:22 AM | Last Updated : 10th May 2019 09:22 AM | அ+அ அ- |

சேலம் உத்தமசோழபுரத்தின் உன்னத வரலாறு என்ற நூல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
சேலம் உத்தமசோழபுரத்தில் உள்ள கரபுரநாதர் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உத்தம சோழபுரத்தின் உன்னத வரலாறு என்ற கவிமுகில் ராஜசேகர் எழுதிய வரலாற்று நூலை சேலம் வரலாற்றுச் சங்கப் பொதுச் செயலாளர் ஜே. பர்னபாஸ் வெளியிட்டார்.
முதல் பிரதியை தாரை அ.குமரவேலு பெற்றுக் கொண்டார். விழாவையொட்டி கரபுரநாதர் கோயிலில் நந்தவனத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. தமிழ் புலவர் அவ்வையாரின் திருவுருவ சிலைக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
விழாவில் எஸ்.ஜி. சுப்பிரமணியன், காவல் ஆய்வாளர் புஷ்பராணி, மரம் வளர்ப்பு ஆர்வலர் ரங்கராஜ், ஜி.சுல்தான், வரலாற்று நூலாசிரியர் எடப்பாடி அமுதன், அச்சுக் கலைஞர் கார்மேகம், ஏவிஎஸ் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர் சஞ்ஜு ஆகியோர் பங்கேற்றனர்.