முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
கன்னிகா பரமேஸ்வரி ஜயந்தி விழா
By DIN | Published On : 15th May 2019 08:55 AM | Last Updated : 15th May 2019 08:55 AM | அ+அ அ- |

ஆத்தூர் கடைவீதியில் உள்ள கன்னிகாபரமேஸ்வரி கோயிலில் கன்னிகா பரமேஸ்வரி ஜயந்தி விழா நடைபெற்றது.
விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை கணபதி ஹோமம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் ஆர்ய வைஸ்யா சங்கத் தலைவர் எல்.பி.என்.வி.கிருஷ்ணன், நிர்மல் பிராகஷ்,கே.கே.பி.உதயக்குமார்,இளைஞரணி சங்கத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து, அன்னதானம் வழங்கப்பட்டது.