முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
சென்னகேசவப் பெருமாள் திருக்கல்யாண வைபவம்
By DIN | Published On : 15th May 2019 08:54 AM | Last Updated : 15th May 2019 08:54 AM | அ+அ அ- |

சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேவசப் பெருமாள் கோயில் வைகாசி தேர்த் திருவிழாவையொட்டி, 7ஆம் நாள் விழாவாக சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி, சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதையடுத்து, பெண்பார்க்கும் படலம், பெண் அழைப்பு நடைபெற்று பட்டாட்சாரியர்கள் வேத மந்திரங்கள் ஓத, திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதன்பின்னர், பல்வேறு வகையான சீர்வரிசை தட்டுகள் வைத்தும், சுவாமிகளின் பெயருக்கு மொய் பணம் எழுதியும் வழிபட்டுச் சென்றனர்.