சுடச்சுட

  

  தெருச்சாலையில் திறந்துக் கிடக்கும் கழிவுநீர் கால்வாய்க்கு பாலம் அமைக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.
  வாழப்பாடி பேரூராட்சியில் வைத்திபடையாச்சி தெரு, அய்யாக்கவுண்டர் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெருச்சாலைகள் இணையும் பகுதியில் குறுக்கிடும் கழிவுநீர் கால்வாய்களின் மேல் தளம் அமைக்காமல் திறந்து கிடக்கின்றன. இதனால் கழிவுநீர் கால்வாயைக் கடந்து இணைப்புச் சாலை மற்றும் குடியிருப்பு பகுதிக்கு செல்ல முடியாமல் துண்டிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
  எனவே, தெருச்சாலைகளின் குறுக்கே திறந்துக் கிடக்கும் கழிவுநீர் கால்வாய்களுக்கு வாகனங்கள் செல்லும் அளவில் உறுதியான சிமென்ட் கான்கிரீட் பாலம் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க  வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai