சுடச்சுட

    

    இடங்கணசாலை பேரூராட்சி பகுதியில் குடிநீர் கோரி 3-ஆவது நாளாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை பேரூராட்சிக்குள்பட்ட 13, 14 வார்டுகளான முருகன் நகர், புவனா கணபதி கோயில், பழகாரத் தோட்டம், மோட்டூர் ஆகிய பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் வராதது குறித்து இடங்கணசாலை பேரூராட்சி செயல் அலுவலரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
    இதையடுத்து, 200-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் இளம்பிள்ளை - சின்னப்பம்பட்டி சாலையில் மோட்டூர் பகுதியில் அரசுப் பேருந்தை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளர் சசிகுமார், இடங்கணசாலை பேரூராட்சி செயல் அலுவலர் தாமோதரன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
    பின்னர் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் டிராக்டர் மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai