Enable Javscript for better performance
சந்தனக்கட்டை கடத்தியதாக ரூ.25 ஆயிரம் அபராதம்- Dinamani

சுடச்சுட

    

    வாழப்பாடி வெள்ளாளகுண்டம் வனப் பகுதியில் சந்தன மரத்தை வெட்டிக் கடத்தியவருக்கு, வனத் துறையினர் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
    வாழப்பாடி வனச் சரகத்தின் வெள்ளாளகுண்டம் காப்புக் காட்டில் மர்ம நபர்கள் சந்தன மரங்களை வெட்டிக் கடத்துவதாக மாவட்ட வன அலுவலர் ஆ.பெரியசாமிக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டபோது, பையுடன் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய மர்ம நபரை பிடித்து சோதனை செய்ததில், 4 கிலோ எடை கொண்ட சந்தனக்கட்டை இருந்தது தெரியவந்தது. 
    சந்தனக் கட்டையை பறிமுதல் செய்த வனத் துறையினர் பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில், அவர்  நாமக்கல் மாவட்டம், கெடமலை மேலூர் கீழுர் கீராமத்தைச் சேர்ந்த பெரியசாமி (35) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, சந்தனக்கட்டையை கடத்த முயன்றதாக ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai