சுடச்சுட

    

    மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சேலம் பாஜகவினர் புகார் மனு அளித்துள்ளனர்.
    இது தொடர்பாக, சேலம் மாநகர மாவட்ட பாஜக தலைவர் ஆர்.பி.கோபிநாத் உள்ளிட்ட பாஜகவினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு விவரம்: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமலஹாசன், அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தின் போது, இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளார். அவருடைய பேச்சுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்துக்களை அவமானப்படுத்தி பேசிய நடிகர் கமலஹாசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.
    வாழப்பாடியில்...
    வாழப்பாடி காவல் நிலையத்தில் பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் புகார் மனு கொடுத்தனர்.
    அதில், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். நாட்டிலுள்ள இந்துக்களிடம் கமலஹாசன் மன்னிப்பு கேட்கவேண்டும் என குறிபிடப்பட்டுள்ளது. இந்த புகார் மனுவை வாழப்பாடி காவல் ஆய்வாளர் சுப்பிரமணியிடம், சேலம் கிழக்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர் சண்முநாதன், மாவட்ட பொதுச் செயலர் குமார், வழக்குரைஞர் மணிகண்டன், ஆடிட்டர் குப்பமுத்து, ஒன்றியத் தலைவர் சிவக்குமார் மற்றும் பா.ஜ.க., இந்து முன்னணி நிர்வாகிகள் ஆகியோர் கொடுத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai