சேலம் மாவட்டத்தில் 72 மி.மீ. மழை பதிவு

சேலம் மாவட்டத்தில் 72.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் 72.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
சேலம் மாவட்டத்தில் அக்னி வெயில் கடுமையாக இருந்த நிலையில், அவ்வப்போது மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், செவ்வாய்க்கிழமை மாலையும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): சங்ககிரி-26, கெங்கவல்லி-18, ஆத்தூர்-16, மேட்டூர்-4, சேலம்-3, ஆனைமடுவு-3 என மாவட்டத்தில் 72.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்த நிலையில், புதன்கிழமை காலை முதல் கடுமையான வெயில் அடித்து வந்த நிலையில், மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. பலமான காற்று வீசியதன் காரணமாக சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் நகர் பகுதியில் ஐந்து சாலை, நான்கு சாலை, மூன்று சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதாலும், சாலை ஓரங்களில் மழை நீர் தேங்கி நிற்பதாலும் நெரிசலால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாயினர்.
ஏற்காட்டில்...
ஏற்காட்டில் புதன்கிழமை மாலை இடி, மின்னல், காற்றுடன் மழை பெய்தது. இதனால், நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டதால், ஏற்காடு மற்றும் சுற்றுபுற கிராமங்கள் இருளில் மூழ்கின. கருங்காலி கிராம வனப் பகுதியில் உயரமான மூங்கில் மரங்கள் மின் கம்பியில் சாய்வதால் மின்தடை ஏற்படுவதாக மின் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com