தொலைநிலைக்கல்வியில் வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்பு
By DIN | Published On : 16th May 2019 09:27 AM | Last Updated : 16th May 2019 09:27 AM | அ+அ அ- |

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கத்தின் வாயிலாக, வேளாண் இடுபொருள் விற்பனையாளர் சான்றிதழுக்கான பட்டப்படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வாழப்பாடியை அடுத்த ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி மைய தலைவர் முனைவர் எஸ்.ஆர்.வெங்கடாஜலம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கத்தின் வாயிலாக இடுபொருள் விற்பனையாளர் சான்றிதழுக்கான வேளாண் இடுபொருள் குறித்த பட்டயப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள், வேளாண் சார்ந்த தொழில் புரிவோர் மற்றும் சுயதொழில் புரிவோர் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இப்பட்டயப் படிப்பில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அல்லது தோல்வியடைந்த 18 வயது நிறைவடைந்த இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
2019-2020 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு odl@tnau.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ர்க்ப்ஃற்ய்ஹன்.ஹஸ்ரீ.ண்ய் என்ற மின்னஞ்சலில் வெள்ளிக்கிழமை (மே 17)மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9442111048 மற்றும் 0422 6611229 என்ற பல்கலைக்கழக எண்களிலோ அல்லது ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி மையத்தின் 04282-293526 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.