நடுவலூர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

கெங்கவல்லி அருகே நடுவலூரில் நிகழ்ந்த கொலையில் மேலும் ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.

கெங்கவல்லி அருகே நடுவலூரில் நிகழ்ந்த கொலையில் மேலும் ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.
கெங்கவல்லி அருகே  நடுவலூரைச் சேர்ந்த விதைப் பண்ணை மேலாளர் செந்தில்குமார் (39), இவரது வீட்டுக்கு அருகில் வசிப்பவர் மணிகண்டன் (43), லாரி ஓட்டுநர். இருவரது வீட்டுக்கும் இடையில் ஒன்றரை அடி நிலம் தொடர்பாக  தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், ஏப். 25-ஆம் தேதி மணிகண்டனும், அவரது வீட்டில் இருந்த தஞ்சாவூரைச் சேர்ந்த கூலிப் படையினர் மொத்தம் 8 பேர் கொண்ட குழு, செந்தில்குமாரை கத்தியால் வெட்டிக் கொலை செய்தது. அதையடுத்து ஆத்தூர் டி.எஸ்.பி. ராஜீ தலைமையில் மொத்தம் ஐந்து தனிப்படையினர் கொலையாளிகளை தேடிவந்தனர்.
அதில் ஏப். 26-ஆம் தேதி நள்ளிரவே, பிரதான கொலையாளி மணிகண்டன்(43), கூலிப் படையினர் அருண்குமார் (33), கண்ணன் (21), மணி (எ) செந்தமிழ்ச்செல்வன் (30) ஆகிய நான்கு பேரையும் தனிப்படையினர் கைது செய்ததுடன், எஞ்சிய நான்கு  பேர்களான மணிகண்டனின் மனைவி ராதா, மகன் அஜய் (14), மணிகண்டன் தம்பி  செந்தில்குமார், இவர்களது உறவினர் சின்னதுரை ஆகிய நான்கு பேரை கெங்கவல்லி போலீஸார் தேடிவந்தனர்.
இந்நிலையில், தேடப்பட்டு வந்த நான்கு பேரில் மணிகண்டன் தம்பி செந்தில்குமார் (36), கெங்கவல்லி அருகே சின்னக்கரட்டூரில் உறவினர் செல்லமுத்து வீட்டில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அதையடுத்து போலீஸார், செவ்வாய்க்கிழமை அதிகாலை செந்தில்குமாரை சுற்றிவளைத்து கைது செய்து ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், மூன்று பேர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com