Enable Javscript for better performance
ஆத்தூர் நகர காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு- Dinamani

சுடச்சுட

    

    ஆத்தூர் நகரக் காவல் ஆய்வாளராக ஊரக காவல் ஆய்வாளர் கே. முருகேசன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
    ஆத்தூர் நகரக் காவல் ஆய்வாளராக என். கேசவன் பணியில் இருந்து வந்தார். அவர் மீது பிரபல நிதி நிறுவன அதிபர் ஜி. பிரேம்குமார் புகார் தெரிவித்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கனிகர் உத்தரவின் பேரில் நகரக் காவல் ஆய்வாளர் என். கேசவன் ஊட்டி மலக் கண்காட்சி பாதுகாப்புப் பணிக்கு அதிரடியாக மாற்றப்பட்டார். ஊரக காவல் ஆய்வாளர் கே. முருகேசன் கூடுதல் பொறுப்பாக ஆத்தூர் நகர காவல் ஆய்வாளர் பணியைக் கவனித்துக் கொள்ளவும் உத்திரவிட்டுள்ளார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai