சுடச்சுட

    

    தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டுக்கு விண்ணப்பிக்க காலநீட்டிப்பு தேவை

    By DIN  |   Published on : 17th May 2019 09:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் அரசு நிதியில் படிப்பதற்கு  25 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க, நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென, கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
    14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி அளிக்கும் நோக்கில்  கடந்த 2009-ல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின் அடிப்படையில் ஏழைக் குழந்தைகளுக்கு அருகிலுள்ள தனியார் பள்ளிகளில் அரசு நிதியில் படிப்பதற்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் நடைமுறைப்
    படுத்தப்பட்டது.
    இத் திட்டத்தின் கீழ் 2009 -ல் இருந்து 2014 வரை அந்தந்த தனியார் பள்ளிகளிலே மாணவர்களைகஈ தேர்வு செய்து சேர்க்கை செய்து கொண்டு, அரசிடம் நிதியை பெற்றுக் கொண்டன. இதில் முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்ததால் கல்வித்துறை வாயிலாக இடஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
    2017-ஆண்டில் இருந்து இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இத் திட்டத்தில் வசிப்பிடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். நான்கு வயது நிறைவு பெறாத குழந்தைகளை மட்டும் எல்.கே.ஜி., வகுப்பில் மட்டுமே சேர்க்க முடியும். இதனால், அருகிலுள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை அனுப்பி வந்து, முதல் வகுப்பில் இருந்து தனியார் பள்ளியில் குழந்தைகளை படிக்க வைக்க விரும்பும் பெற்றோர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகிறது.
    பெரும்பாலான குக்கிராமங்களை சுற்றி, ஓரிரு கி.மீ., தூரத்திற்குள் தனியார் பள்ளிகள் இல்லாததால் விண்ணப்பிக்க முடியாமல் போகிறது. எனவே, மூன்று கி.மீ., முதல் 3 கி.மீ., தூரத்திற்குள்ள தனியார் பள்ளிகளுக்கும் விண்ணப்பிக்கவும், மூன்று முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை எல்.கே.ஜி மட்டுமின்றி முதல் வகுப்பில் சேர்ப்பதற்கும் அரசு வழிவகை செய்ய வேண்டும். இணைய வழியில் விண்ணப்பிப்பதில் அடிக்கடி தடங்கல் ஏற்படுவதால்,  மே 18 ந்தேதி முடிவுறும் விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிப்பு செய்ய வேண்டுமெனவும், கல்வியாளர்கள் மற்றும் கிராமப்புற பெற்றோர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
    இது குறித்து, சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஜீவநாராயணன் கூறியதாவது:
    இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் அருகாமையிலுள்ள தனியார் பள்ளிகளில் ஏழைக்குழந்தைகளை சேர்த்து  அரசு நிதியில் படிக்க வைக்கும் 25 இடஒதுக்கீட்டு திட்டம் வரவேற்கதக்கதாகும். இத்திட்டத்தின் கீழ் 1 கி.மீ., தூரத்திற்குள்ள 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகிறது.  பெரும்பாலான கிராமங்களைச் சுற்றி ஒரு கி.மீ., தூரத்திற்குள் தனியார் பள்ளிகள் இருப்பதில்லை. எனவே 3 முதல் 5 கி.மீ., தூரத்திற்குட்பட்ட குழந்தைகளையும், எல்.கே.ஜி மட்டுமின்றி முதல் வகுப்பிலும் சேர்ப்பதற்கும் விதிமுறைகளை தளர்த்தி வழிவகை செய்திட மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இத் திட்டத்தில் விண்ணப்பிக்க மே 18 ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இணையச் சேவை சரிவர கிடைக்காததால், விண்ணப்பிக்கும் தேதியை 25 ஆம் தேதிவரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai