முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
இலைக்கான வாழையை வளர்க்க வேண்டும்: விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் அறிவுரை
By DIN | Published On : 18th May 2019 09:15 AM | Last Updated : 18th May 2019 09:15 AM | அ+அ அ- |

விவசாயிகள் நஷ்டத்தைத் தவிர்க்க, இலைக்கான வாழையை வளர்க்க வேண்டும் என்று வேளாண்மைத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம், கருப்பூர் வட்டாரத்தில் வாழை அதிகமாக பயிரிடப்படுகிறது. கடந்த இரு மாதங்களாக சூறைக் காற்றுக்கு வாழைகள் சேதமடைந்தாலும், வாழை இலை, வாழை நார் உற்பத்தி செய்து ஓரளவுக்கு நஷ்டத்தை விவசாயிகள் ஈடுகட்டியுள்ளனர்.
தற்போது சில குறிப்பிட்ட வகையிலான பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடையால் வாழை இலைக்கும் நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், இலைக்கான வாழையை வளர்க்குமாறு வேளாண்மைத் துறையினர் கேட்டுகொண்டுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியது:-
சூறைக் காற்றுக்கு பயந்து வாழை சாகுபடி செய்ய வாய்ப்புடைய பெரிய விவசாயிகள், அதிக பராமரிப்பு செலவு, உரச்செலவு செய்யாமலே,நீர்,மண் வசதி இருந்தால் வெகு வேகமாக வளரும் இலை வாழை மூலம் அதிக லாபம் ஈட்டலாம். வாழை பழமும், வாழையையும் வெட்டிய பின்னர் வாழை நார் மூலமும் வருவாய் கிடைக்கும் என்றனர்.