முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
கெங்கவல்லி, தம்மம்பட்டியில் எமிஸ் சிறப்பு முகாம்
By DIN | Published On : 18th May 2019 09:13 AM | Last Updated : 18th May 2019 09:13 AM | அ+அ அ- |

கெங்கவல்லி ,தம்மம்பட்டியில் எமிஸ் சிறப்பு முகாம்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
2019-20-ஆம் கல்வியாண்டில் மாணவர்கள், ஆசிரியர்களின் விவரங்கள் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கான நலத் திட்ட உதவிகளும், ,ஆசிரியர்களது அனைத்து மாறுதல்களும் எமிஸ் இணையதளம் வாயிலாகவே நடைபெற உள்ளது. இதையடுத்து, பதிவேற்றும் பணி நடைபெற்றுவருகிறது.
இதையடுத்து, கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் அனைத்து விவரங்களும் எமிஸ் இணையதளத்தில் சரிபார்ப்பதுடன், விடுபட்ட விவரங்களை சேர்த்தல் போன்றவை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கெங்கவல்லி, தம்மம்பட்டியில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்ற முகாம்களில் வட்டார ஆசிரியர் பயிற்றுநர்கள் பச்சையம்மாள், பாலமுருகன், பன்னீர்செல்வம், சுப்பிரமணியன், சுப்பிரமணி, செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முகாம்களை, கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாசுகி, அந்தோணிமுத்து, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுஜாதா உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.