தலைமைக் காவலரின் தந்தை மாயம்: போலீஸார் விசாரணை
By DIN | Published On : 18th May 2019 09:14 AM | Last Updated : 18th May 2019 09:14 AM | அ+அ அ- |

தலைமைக் காவலரின் தந்தை மாயமானது குறித்து, 3 மாதத்துக்குப் பின்னர், வாழப்பாடி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
வாழப்பாடியை அடுத்த திருமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (64). இவர் பிப்ரவரி 25-ஆம் தேதி, தனியார் நிறுவனத்துக்கு இரவு காவலாளி வேலைக்கு செல்வதாகக் கூறிச்சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில், பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அவரை கண்டுபிடித்துக் கொடுக்குமாறும் அவரது மகனும், சேலம் சி.சி.பி. பிரிவு தலைமைக் காவலருமான செல்வம் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.