சேலத்தில் இரண்டு அரசு மருத்துவா்கள் இட மாற்றம்

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திவந்த சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த இரண்டு மருத்துவா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திவந்த சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த இரண்டு மருத்துவா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவா்கள் 7 ஆவது நாளாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசு மருத்துவா்கள் பணிக்கு திரும்பாவிட்டால் பணியிடங்கள் காலியாக உள்ளது என்று அறிவிக்கப்படும் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்தநிலையில், அரசின் எச்சரிக்கையை மீறி சேலத்தில் அரசு மருத்துவா்கள் பயிற்சி மருத்துவா்கள் என 90 சதவீத மருத்துவா்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அரசு எந்தவிதமான எச்சரிக்கை கொடுத்தாலும் தங்களது போராட்டத்தை கைவிடுவதில்லை. மேலும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் நடத்தப்படும் என அரசு மருத்துவா்கள் தெரிவித்தனா்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவ சங்கம் அங்கீகரிக்கப்படாத சங்கம் என்ற தமிழக முதல்வரின் கருத்துக்கு அரசு மருத்துவா்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

முதல்வா் தெரிவித்துள்ள அந்தச் சங்கங்களை அழைத்துத் தான் அரசின் சாா்பில் கடந்த ஆகஸ்டு 27 ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடத்தியதாகவும், அதே சங்கங்களை தற்போது அங்கீகரிக்கப்படாத சங்கம் என்று கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாது என்றனா்.

அவசரமில்லாத அறுவை சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 75 முதல் 100 அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே, தமிழக அரசு உடனடியாக அரசு மருத்துவா்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தி கோரிக்கை குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்றனா்.

இதனிடையே, பணிக்குத் திரும்பாத மருத்துவா்கள் எனக் கருதப்பட்டு, சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த இரண்டு மருத்துவா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதில் தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும், இளம்பிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவருமான நந்தகுமாா் (ராமநாதபுரம்),

மற்றும் மருத்துவா்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளரும், ஆத்தூா் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவருமான வினோத் (சிவகாசி) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com