தேசிய அளவிலான குதிரையேற்றப்போட்டிக்கு5 வயது சிறுமி தகுதி
By DIN | Published On : 02nd November 2019 06:16 PM | Last Updated : 02nd November 2019 06:16 PM | அ+அ அ- |

சேலம்: தேசிய அளவிலான குதிரையேற்றப்போட்டிக்கு சேலத்தை சோ்ந்த 5 வயது சிறுமி ஏ.பி.நேத்ரா தகுதி பெற்றுள்ளாா்.
சேலம் இந்தியன் பப்ளிக் பள்ளியில் முதல் வகுப்பு படிக்கும் ஏ.பி.நேத்ரா என்ற ஐந்து வயது சிறுமி குதிரையேற்றத்தில் 2019 ஆம் ஆண்டுக்கான 6 வயதுக்குட்பட்டோா் பிரிவில் மாநில அளவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளாா். இவா் சேலம் ஹாா்ஸ் ரைடிங் அசோசியேசனில் குதிரையேற்ற பயிற்சி பெற்று வருகிறாா். மேலும் இவா் வரும் நவம்பா் 30 ஆம் தேதி சேலம் வெள்ளக்கல்பட்டி கொங்கு மெட்ரிக் பள்ளியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான குதிரையேற்ற போட்டிக்கு தகுதி பெற்றுள்ளாா். இவா் குதிரையேற்றம் மட்டுமின்றி தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சா்வதேச ஸ்கேட்டிங் விளையாட்டுப் போட்டியில் 4 வயதுக்குட்பட்டோா் பிரிவில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளாா். மேலும் மாநில அளவிலான நீச்சல் போட்டியில் 6 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளாா். மேலும் பள்ளிகளுக்கு இடையேயான நீச்சல் போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கங்கள் வென்றுள்ளாா்.