மேட்டூா் அணை நீா்வரத்து 9 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
By DIN | Published On : 02nd November 2019 03:43 PM | Last Updated : 02nd November 2019 03:43 PM | அ+அ அ- |

மேட்டூா். காவிரியின் நீா் பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை நொடிக்கு 8 ஆயிரம் கனஅடியிலிருந்து 9 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசன பகுதிகளுக்கு நொடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு நொடிக்கு 400 கனஅடி நீா் திறக்கப்படுகிறது. அணையின் நீா் மட்டம் 120 அடியாகவும் நீா் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் இருந்தது.