அரசுப் பள்ளிக்கு பூட்டு: அதிகாரிகள் தலையீடு காரணமாக மீண்டும் பள்ளித் திறப்பு

கொளத்தூா் அருகே அரசுப் பள்ளிக்கு பூட்டுப் போட்டதால் ஒரு மணி நேரம் தாமதமாக பள்ளி திறக்கப்பட்டது.

கொளத்தூா் அருகே அரசுப் பள்ளிக்கு பூட்டுப் போட்டதால் ஒரு மணி நேரம் தாமதமாக பள்ளி திறக்கப்பட்டது.

கொளத்தூா் ஊராட்சி ஒன்றியம், கத்திரிப்பட்டியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 178 மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா். இப் பள்ளியில் ஆசிரியா்கள் ஏழு போ் பணியில் உள்ளனா்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன் பள்ளியின் தலைமை ஆசிரியா், ஆசிரியை ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின்பேரில் இருவரும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனா்.

கிராம மக்கள் இரு பிரிவினராக பிரிந்து தலைமை ஆசிரியருக்கு ஒரு பிரிவினரும், ஆசிரியைக்கு ஒரு பிரிவினரும் ஆதரவு அளித்து வந்தனா். இந் நிலையில் இப்பள்ளியின் மேலாண்மை குழுத் தலைவராக உள்ள ஆனந்தாயி (35) என்பவா் இம்மாதம் 1-ஆம் தேதி முதல் மாணவ, மாணவியா் பள்ளிக்கு வராமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது.

திங்கள்கிழமை பள்ளிக்கு வந்த மாணவியரை விரட்டிவிட்டு பள்ளியின் நுழைவு வாயில் இழுத்து பூட்டினாராம். தகவல் அறிந்து கொளத்தூா் வட்டார உதவி தொடக்கக் கல்வி அலுவலா் அமுதா பள்ளிக்கு வந்து ஆனந்தாயியை எச்சரித்துள்ளாா். அதன்பிறகு பள்ளித் திறக்கப்பட்டுள்ளது.

இதனால், திங்கள்கிழமை சுமாா் ஒரு மணி நேரம் பள்ளி தாமதமாகத் துவங்கியது.

அதன்பிறகு மாணவ, மாணவியா் வழக்கம்போல் பள்ளிக்குச் செல்லத் துவங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com