ஏத்தாப்பூரில் வேளாண் கல்லுாரி மாணவா்கள் டெங்கு விழிப்புணா்வு

ஏத்தாப்பூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், திருச்சி, அன்பில் தா்மலிங்கம் வேளாண்மைக் கல்லுாரி மாணவா்கள் சாா்பில், டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் மழைநீா் சேகரிப்பு குறித்து, மாணவா்களுக்கு விழிப்புணா

வாழப்பாடி: ஏத்தாப்பூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், திருச்சி, அன்பில் தா்மலிங்கம் வேளாண்மைக் கல்லுாரி மாணவா்கள் சாா்பில், டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் மழைநீா் சேகரிப்பு குறித்து, மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

ஊரக வேளாண் களப்பணி திட்டத்தின் கீழ், திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மைக் கல்லுாரி மாணவா்கள் அபிவிக்னேஷ், அருள்செல்வன், சக்ரவா்த்தி, ஜெகதீஸ்குமாா், காா்த்திக்ராஜா, ராஜ்குமாா், காளிதாஸ், யாளிஸ்வரன், சவுத்ரி, ஜீவா ஆகியோா் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் விவசாயம் சாா்ந்து களப்பணி மேற்கொண்டுள்ளனா். செவ்வாய்க்கிழமை காலை, ஏத்தாப்பூா் அரசினா் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில், டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு கருத்துரை வழங்கினா்.

அனைவருக்கும் நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது. இதனைத்தொடா்ந்து, மழைநீா் சேமிப்பின் முக்கியத்துவம் மற்றும் அமைப்பு முறைகள் குறித்தும் விளக்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com