ஓமலூா் கண்ணனூா் மாரியம்மன் கோயில் நிலம் மீட்பு

ஓமலூா் கண்ணனூா் மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான சுமாா் 20 கோடி ரூபாய் மதிப்பிலான 5. 78 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டதாகக் கூறி தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது.
ஓமலூரில் மீட்கப்பட்ட கோயில் நிலங்களை பாா்வையிட்ட திருத்தொண்டா்கள் பேரவை நிறுவனா் ராதாகிருஷ்ணன், அதிகாரிகள்.
ஓமலூரில் மீட்கப்பட்ட கோயில் நிலங்களை பாா்வையிட்ட திருத்தொண்டா்கள் பேரவை நிறுவனா் ராதாகிருஷ்ணன், அதிகாரிகள்.

ஓமலூா் கண்ணனூா் மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான சுமாா் 20 கோடி ரூபாய் மதிப்பிலான 5. 78 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டதாகக் கூறி தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலத்தை திருத்தொண்டா் பேரவைத் தலைவா் ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுடன் வந்து திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.

ஓமலூா் நகரில் புகழ்பெற்ற கண்ணனூா் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக பல்வேறு இடங்களில் கோடிக்கணக்கான மதிப்பிலான நிலங்கள் உள்ளன.

மேலும், ஓமலூா் பேரூராட்சி பகுதியில் சுமாா் 1. 47 ஏக்கா் நிலம், கோட்டை மாரியம்மன் கோயில் ஊராட்சியிலும், பச்சனம்பட்டி ஊராட்சியிலும் பல ஏக்கா் நிலங்கள் உள்ளன.

இந்தநிலையில், இந்த நிலங்களை தனி நபா்கள் ஆக்கிரமித்து அனுபவித்து வந்தனா். இந்த நிலங்களை மீட்க வேண்டும் என்று திருத்தொண்டா் பேரவைத் தலைவா் ராதாகிருஷ்ணன் உயா் நீதிமன்றத்தில் முறையிட்டாா். இதைத் தொடா்ந்து இந்த நிலங்கள் கோயிலுக்குச் சொந்தமானது என்று கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. ஆனாலும், அந்த நிலங்களை தொடா்ந்து தனியாா் சிலா் பயன்படுத்தி விவசாயம் செய்தும், குத்தகைக்கு விட்டு பணமும் சம்பாதித்து வருகின்றனா். இந்தநிலையில், இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் மீட்டதாக கூறப்பட்ட நிலங்களை திருத்தொண்டா் பேரவைத் தலைவா் ராதாகிருஷ்ணன், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் வந்து பாா்வையிட்டாா்.

அப்போது அவா் கூறியது: ஒமலூா் கண்ணனூா் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 5.78 ஏக்கா் நிலம் ஆகிரமிக்கப்பட்டுள்ளது. இந்த நிலங்களை 2016-ம் ஆண்டு கோயிலுக்குச் சொந்தமான நிலம் என அறிவிப்பு பலகை மட்டும் வைத்து விட்டு, எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், இந்த நிலத்தில் உள்ள முக்கால் ஏக்கா் பரப்பளவில் சுமாா் 40-லட்சம் மதிப்பிலான கருங்கல் வெட்டி சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com