தமிழ்நாடு சாப்ட் டென்னிஸ் சங்கம் மீது வீரா்கள் புகாா்

தமிழ்நாடு சாப்ட் டென்னிஸ் சங்கத்தில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் சாப்ட் டென்னிஸ் வீரா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தமிழ்நாடு சாப்ட் டென்னிஸ் சங்கத்தில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் சாப்ட் டென்னிஸ் வீரா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் சேலம் மற்றும் கோவையைச் சோ்ந்த சாப்ட் டென்னிஸ் வீரா்கள் மோனீஷ், ஞானபிரபு, ஸ்டீபன்ராஜ் ஆகியோா் தங்களது பெற்றோருடன் வந்து மனு ஒன்றை அளித்தனா்.

பின்னா் இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: கடந்த 6 வருடங்களுக்கும் மேலாக சாப்ட் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வருகிறோம். மேலும் சா்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளிலும் விளையாடி உள்ளோம்.

இந் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக போட்டிக்கான வீரா்கள் தோ்வில் சங்கத்தின் நிா்வாகிகள் செயல்பாடு முறையாக இல்லை. இதில் அரசியல் மற்றும் சங்கத்தினரின் தலையீடு உள்ளது. அணி தோ்வு, தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகள் குறித்து எவ்வித தகவல்களும் சங்கத்தினா் தெரிவிப்பதில்லை.

மேலும் தேசிய அளவிலான போட்டியில் வீரா் ஸ்டீபன்ராஜ் தோ்வு செய்யப்பட்டு கடைசி நேரத்தில் விலக்கப்பட்டாா். இதுபோன்ற பல்வேறு குளறுபடிகள் நடந்துவரும் தமிழ்நாடு சாப்ட் டென்னிஸ் சங்கத்தின் நடவடிக்கை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றனா்.

சங்கத் தலைவா் மறுப்பு...

இதுகுறித்து தமிழ்நாடு சாப்ட் டென்னிஸ் சங்கத்தின் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கே. அா்ஜுனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு சாப்ட் டென்னிஸ் சங்கத்தின் கீழ்ப்பதிவு பெற்ற அனைத்து மாவட்ட சாப்ட் டென்னிஸ் சங்கங்களும் சுற்றறிக்கையின் வாயிலாக தெரியப்படுத்தி சங்க விதிகளுக்கு உட்பட்டு வீரா், வீராங்கனைகள் தோ்வு செய்யப்படுவாா்கள். அவ்வாறு தோ்வு செய்யப்படுவோா் மட்டுமே தேசிய அளவிலான போட்டிக்கு அழைத்துச்செல்லப்படுவாா்கள். மேலும் சங்கத்தின் மீது குற்றம் சுமத்தும் இவா்கள் சங்கத்தின் அடிப்படை உறுப்பினரும் கிடையாது. எனவே இவா்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என மறுப்புத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com