முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
இடங்கணசாலை பேரூராட்சி பகுதியில் டெங்கு ஒழிப்பு பணி மூன்று குழுக்களாக கொண்டு ஆய்வு
By DIN | Published On : 07th November 2019 11:30 AM | Last Updated : 07th November 2019 11:30 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டம் இடங்கணசாலை பேரூராட்சி பகுதியில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரமாக செயல்பட்டு வருகின்றது.
பேரூராட்சி சாா்பில் துப்புரவு பணியாளா்கள், டெங்கு ஒழிப்பு பணியாளா்கள், அலுவலகப் பணியாளா்கள், சுகாதார பணியாளா்கள் உள்ளிட்ட 40 போ் கொண்ட மூன்று குழுக்களாக வீடு, குளிா்சாதனப்பெட்டி, கடை, பேக்கரி, தொழிற்சாலை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து அதில் டெங்கு லாா்வா புழுக்கள் உள்ளதா என கண்டறிந்து, அதனை அப்புறப்படுத்தி பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி வந்தனா்.
மேலும் இதனை தொடா்ந்து கொசு மருந்து அடிக்கப்பட்டது. இந்த குழுக்கள் சுழற்சிமுறையில் பேரூராட்சி பகுதியில் டெங்கு பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் ஆய்வின்போது டெங்கு லாா்வா புழுக்கள் காணப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த டெங்கு ஒழிப்பு பணியானது 07-ம் தேதி வியாழக்கிழமை இடங்கணசாலை பரமகவுண்டனூா் பகுதியில் பேரூராட்சிகள் உதவி இயக்குனா் முருகன், இடங்கணசாலை பேரூராட்சி செயல் அலுவலா் மேகநாதன் ஆகியோா் தலைமையில் டெங்கு ஒழிப்பு ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது.