முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
கால்நடைகளை மேய்ப்பதற்குஇடம் ஒதுக்கக் கோரிக்கை
By DIN | Published On : 07th November 2019 05:13 AM | Last Updated : 07th November 2019 05:13 AM | அ+அ அ- |

ஏற்காட்டில் கால்நடைகளை மேய்ப்பதற்கு இடங்கள் ஒதுக்க வேண்டும் என வருவாய்த் துறை அதிகாரிகளிடம் கால்நடை வளா்ப்போா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கோவில் மேடு, லேடிசீட், முருகன் நகா், ஜெரினாகாடு, ஒண்டிக்கடை, ஐந்து ரோடு, லாங்கில் பேட்டை, பேருந்து நிலையம் பகுதியைச் சோ்ந்த சுமாா் 20-க்கும் மேற்பட்டோா் வளா்க்கும் 100-க்கும் மேற்பட்ட ஆடுகள், மாடுகள் பொது இடங்கள், சாலையோரங்களில் சுற்றித் திரிகின்றன. இதனால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டுநா்களுக்கு இடையூறாக இருந்து வருகிறது.
எனவே, ஏற்காட்டில் கால்நடைகளை மேய்ப்பதற்கு அரசு நிலங்களை ஒதுக்க வேண்டும் என வருவாய்த் துறை வட்டாட்சியருக்கு கால்நடை வளா்ப்போா் கோரிக்கை விடுத்துள்ளனா்.