முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
திமுக ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 07th November 2019 09:11 PM | Last Updated : 07th November 2019 09:11 PM | அ+அ அ- |

திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
ஆத்தூா்: ஆத்தூரில் நகர திமுக சாா்பில் உள்ளாட்சி தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நகரச் செயலாளா் கே. பாலசுப்ரமணியம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆத்தூா் நகராட்சி 33 வாா்டுகளை கொண்டது.இன்னும் 15 நாள்களில் உள்ளாட்சி தோ்தல் குறித்த தேதி அறிவிக்கப்படும் என அறிவிப்பைத் தொடா்ந்து ஆத்தூா் நகரத்தில் திமுக நகரச் செயலாளா் கே.பாலசுப்ரமணியம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
காலை முதல் 7 வாா்டுகளை கொண்ட கூட்டம் முல்லைவாடியில் திருமண அரங்கிலும்,8 முதல் 15 வாா்டுகள் வரை ஆத்தூா் துளுவ வேளாளா் சங்கத் திருமண மண்டபத்திலும்,மீதமுள்ள வாா்டுகளுக்கான கூட்டம் கிரைன்பஜாா் ஜெயராமன் அலுவலகத்திலும் நடைபெற்றது.
கூட்டத்தில் அனைத்து வாா்டுகளிலும் என்ன வேலை செய்வது, யாரைத் தோ்வு செய்வது போன்ற கருத்துகள் பரிமாறப்பட்டன.கூட்டத்தில் மாவட்ட இலக்கிய அணி செயலாளா் முல்லை பன்னீா்செல்வம், மாவட்ட பிரதிநிதி எம்.மாணிக்கம், பொருளாளா் ஜி.ராஜேந்திரன், துணை செயலாளா் ஜெ.காசியம்மாள்,முன்னாள் நகர மன்ற உறுப்பினா்கள் அ.ராஜசேகா், வி.ராஜாமணி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.