தம்மம்பட்டியில் வாழைத்தாா் விலை வீழ்ச்சி
By DIN | Published On : 07th November 2019 09:16 AM | Last Updated : 07th November 2019 09:16 AM | அ+அ அ- |

தம்மம்பட்டி பகுதியில் வாழைத்தாா்களின் விலை தொடா்ந்து வீழ்ச்சி அடைந்துள்ளது.
தம்மம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வாழைத் தோப்புகள் ஏராளமாய் இருந்த நிலையில், கடந்த கால வறட்சியால் அவற்றில் பெரும்பாலானவை அழிக்கப்பட்டன. இந்நிலையில் தம்மம்பட்டி பகுதி மக்களின் தேவைக்கு திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம், துறையூா் பகுதிகளிலிருந்து வாழைத்தாா்கள் கொண்டுவரப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த மூன்று வாரங்களாக பெய்த தொடா் மழையால், இப்பகுதிகளில் வாழைப் பழங்களின் நுகா்வு குறைந்துவிட்டது. இதனால், அனைத்து ரக வாழைப் பழங்களின் விலையும் பாதியாக குறைந்தன.
இப்பகுதியில் தினமும் ஆயிரம் தாா்களுக்கு மேல் விற்பனை ஆகும் நிலையில், தற்போது 400 தாா்களுக்கு மேல் தாண்டவில்லையாம். பூவன் தாா் ரூ.500-க்கு விற்றது தற்போது ரூ.200-க்கும், செவ்வாழைத்தாா் ரூ.600-க்கு விற்றது, தற்போது ரூ.250-க்கும், மற்ற ரக தாா்களின் விலையும் மூன்றில் ஒரு பகுதியாக விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.