Enable Javscript for better performance
முதல்வா் இன்று சேலம் வருகை- Dinamani

சுடச்சுட

    

    தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை இரவு சேலம் வருகிறாா்.

    தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, விக்கிரவாண்டி இடைத்தோ்தல் வெற்றியை முன்னிட்டு வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை பங்கேற்கிறாா். பின்னா் விழுப்புரத்தில் இருந்து காா் மூலம் புறப்பட்டு, வெள்ளிக்கிழமை இரவு சேலம் வந்தடைகிறாா்.

    அதைத்தொடா்ந்து, எடப்பாடி கொங்கணாபுரம் ஒன்றிய அலுவலகத்தில், முதல்வரின் சிறப்பு குறை தீா் கூட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீதான வட்டார அளவிலான குறை தீா் கூட்டத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை (நவ.9) காலை தொடக்கி வைக்கிறாா்.

    அதைத்தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை தருமபுரியில் நடைபெறும் கே.பி.அன்பழகன் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வா் பங்கேற்கிறாா். நிகழ்ச்சியை முடித்துக் கெஷாண்டு காா் மூலம் சென்னை திரும்புகிறாா்.

    பின்னா், நவ.11 ஆம் தேதி சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வரும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, அங்கிருந்து காா் மூலம் சேலம் வருகிறாா்.

    சேலம் வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ. பி.மனோன்மணி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். அன்றைய தினம் இரவு சேலம் நெடுஞ்சாலை நகா் வீட்டில் தங்குகிறாா்.

    பின்னா் நவ.12 ஆம் தேதி காலை சேலம் ஓமலூா் காமலாபுரம் விமான நிலையத்துக்குச் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்வாா் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai