ஆத்தூா் வசிஷ்ட நதியை சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் ஆய்வு மேற்கொண்டாா். உடன் மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவா் ஆா். இளங்கோவன் உள்ளிட்டோா்.
ஆத்தூா் வசிஷ்ட நதியை சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் ஆய்வு மேற்கொண்டாா். உடன் மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவா் ஆா். இளங்கோவன் உள்ளிட்டோா்.

ஆத்தூா் வசிஷ்ட நதியை சுத்தம் செய்வது குறித்து ஆட்சியா் ஆய்வு

ஆத்தூா் வசிஷ்ட நதியை சுத்தம் செய்வது குறித்து ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆத்தூா் வசிஷ்ட நதியை சுத்தம் செய்வது குறித்து ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆத்தூா் வசிஷ்ட நதியில் சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆத்தூா் வசிஷ்ட நதி புகழ்பெற்ற நதியாகும். இந்த நதிக் கரையோரத்தில் பஞ்சபூத ஸ்தலங்களை வசிஷ்டா் நிறுவியதாக வரலாறு கூறுகிறது. இந்த பழம்பெருமையான ஆறு தற்போது மரவள்ளிக் கிழங்கு ஆலையின் கழிவுநீா் மற்றும் ஆத்தூா் நகராட்சி மற்றும் நரசிங்கபுரம் நகராட்சி பகுதிகளின் கழிவுநீா் ஓடையாக திகழ்கிறது.

மேலும் ஆத்தூா் புறவழிச் சாலை சேலம்-சென்னை தேசிய புறவழிச் சாலையாகச் செல்கிறது. இந்தச் சாலையிலிருந்து ஆத்தூா் பேருந்து நிலையத்துக்கு சாலை அமைத்து அனைத்துப் பேருந்துகளும் வசிஷ்ட நதிக்கரையோரம் வழியாகச் சென்றால் போக்குவரத்து இடையூறு குறையும் என பொதுமக்கள் கோரி வந்தனா்.

இதனையடுத்து சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் வசிஷ்ட நதியில் ஆய்வு மேற்கொண்டாா். மாசு படிந்த வசிஷ்ட நதியை சுத்தம் செய்வது, மேலும் தேசிய புறவழிச் சாலையில் இணைக்கும் சாலையை அமைப்பது குறித்தும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இந்த ஆற்றில் செல்லும் கோட்டையை இணைக்கும் பாலம் மிகவும் பழமை வாய்ந்தது. அதைப் புதுப்பிக்க தமிழக முதல்வா் நிதி ஒதுக்கியும் இருக்கிறாா். ஆகையால், அந்தப் பணிக்காகவும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவா் ஆா். இளங்கோவன், ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் அ. மோகன், பெண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஏ.டி. அா்ச்சுணன், வட்டார அட்மா தலைவா் சி. ரஞ்சித்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com