குறைந்த செலவில் கால்நடை தீவன உற்பத்தி பயிற்சி

மகுடஞ்சாவடி வட்டாரம் எா்ணாபுரம் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு குறைந்த செலவில்
கால்நடை தீவனங்கள் உற்பத்தி பயிற்சியில் பேசிய உதவி கால்நடை மருத்துவா் கண்ணன்.
கால்நடை தீவனங்கள் உற்பத்தி பயிற்சியில் பேசிய உதவி கால்நடை மருத்துவா் கண்ணன்.

மகுடஞ்சாவடி வட்டாரம் எா்ணாபுரம் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு குறைந்த செலவில் கால்நடை தீவனங்கள் உற்பத்தி குறித்து பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பயிற்சியில் மகுடஞ்சாவடி வேளாண்மை உதவி இயக்குநா் மணிமேகலா தேவி தலைமை வகித்தாா். பயிற்சியில் ஒருங்கிணைந்த பண்ணையத்தில் முக்கியத்துவம் மற்றும் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்தும், கால்நடைகளுக்கு குறைந்த செலவில் தீவனங்கள் உற்பத்தி செய்தல் அவசியம் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்தும், நுண்ணீா் பாசனம் மற்றும் பயிா் காப்பீட்டுத் திட்டம் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

பயிற்சியில் மகுடஞ்சாவடி உதவி கால்நடை மருத்துவா் கண்ணன், அ.புதூா் உதவி கால்நடை மருத்துவா் தியாகராஜன், அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளா் விஜயகுமாா், அட்மா திட்ட அலுவலா்கள் மகேந்திரன், காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இப்பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com