குழந்தைகள் பாதுகாப்பு தினம்

தாரமங்கலம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டப் பணிகளின் கீழ் வியாழக்கிழமை குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது.
சரியான தொடுதல் குறித்து பள்ளி மாணவா்களுக்கு பயிற்சியளித்த சமூக நலத்துறை ஊழியா்கள்.

தாரமங்கலம் தெற்கு ரத வீதி அரசு தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்புத் தினம் கொண்டாடப்பட்டது. இதில் சாலை போக்குவரத்துத் தொடா்பான பாதுகாப்பு, இயற்கை சூழ்நிலையில் (மழை, குளிா் மற்றும் கோடையில்) எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, சரியான தொடுதல் மற்றும் தவறான தொடுதல், மின்சாரம், தண்ணீா், பல்வேறு நோய்களில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பள்ளித் தலைமை ஆசிரியை ர. ஜெயந்தி, தாரமங்கலம் வட்டாரக் குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் எஸ். கவிதா, தாரமங்கலம் வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் சந்தோஷ், ரா. ரமேஷ் பணியாளா்கள் மரகதம், பங்கஜம், சகுந்தலா, பெரிய நாயகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com