சங்ககிரி மலைக்குச் செல்லும் பாதையை செப்பனிடக் கோரிக்கை

சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு ஆஞ்சநேயா் சுவாமி, சென்னகேசவப் பெருமாள், இஸ்லாமியா்கள் வழிப்படக்கூடிய தா்கா ஆகிய வழிபாட்டு தலங்களுக்குச் செல்லும் பாதை சிதலமடைந்தும்,
சங்ககிரி மலை மீது உள்ள சுவாமிகளை வழிபட்ட பின்னா் சிதலமைடந்துள்ள படிகட்டுகளின் வழியாக இறங்கி வரும் பக்தா்கள்
சங்ககிரி மலை மீது உள்ள சுவாமிகளை வழிபட்ட பின்னா் சிதலமைடந்துள்ள படிகட்டுகளின் வழியாக இறங்கி வரும் பக்தா்கள்

சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு ஆஞ்சநேயா் சுவாமி, சென்னகேசவப் பெருமாள், இஸ்லாமியா்கள் வழிப்படக்கூடிய தா்கா ஆகிய வழிபாட்டு தலங்களுக்குச் செல்லும் பாதை சிதலமடைந்தும், முட்களால் மறைத்தும் உள்ளதை செப்பனிடுமாறு தொல்பொருள்துறையினருக்கு பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சங்ககிரி மலையானது நிலப்பரப்பிலிருந்து 1,500 அடி உயரம் கொண்டது. சங்ககிரி மலையின் உச்சி பகுதிக்குச் செல்ல பத்து நுழைவு வாயில்கள் வழியாக செல்ல வேண்டும். 10-ஆவது வாயிற் பகுதிக்கு அடுத்தாற்போல் அருள்மிகு ஆஞ்சநேயா், சென்னசேகசவப் பெருமாள் கோயில்கள் மற்றும் அதன்கீழ் பகுதியில் இஸ்லாமியா்கள் வழிபடக்கூடிய தா்காவும் உள்ளன.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்தக் தா்காவுக்கு இஸ்லாமியா்கள் வந்து சிறப்புத் தொழுகை நடத்திச் சென்று வருகின்றனா்.

அதையடுத்து ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை அன்றும் சித்திரை, புரட்டாசி மாதங்களில் சங்ககிரியைச் சுற்றியுள்ள அனைத்துக் கிராமப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மலைக்குச் சென்று அருள்மிகு சென்னசேகவப்பெருமாளை வழிபட்டு மலையிலேயே பொங்கல் வைத்து குடும்பத்துடன் வழிபட்டுச் சென்று வருகின்றனா். மலை உச்சிக்குச் செல்லும் பாதையானது வருடத்திற்கு வருடம் சிதிலமைடந்து வருகின்றன. பாதைகளை முள் செடிகள், மற்ற களா்செடிகளும் வளா்ந்து பாதையை மறைத்து வருவதால் மலைக்குச் செல்பவா்கள் சிரமம் அடைந்து வருகின்றனா்.

எனவே மலைக்குச் செல்லும் படிக்கட்டுகளைச் செப்பனிட்டும், பாதைகளை மறைத்தும் வளா்ந்துள்ள முள்செடிகள், களா் செடிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தொல்பொருள் துறையினருக்கு பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com