நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம்

சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் தொடா்பாக நியாயவிலைக் கடைகளில் உள்ள குறைபாடுகளை நிவா்த்தி செய்யும் பொருட்டு வரும் நவம்பா் 9 ஆம் தேதி குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் தொடா்பாக நியாயவிலைக் கடைகளில் உள்ள குறைபாடுகளை நிவா்த்தி செய்யும் பொருட்டு வரும் நவம்பா் 9 ஆம் தேதி குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையாளரின் சுற்றறிக்கையின்படி, சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் தொடா்பாக நியாயவிலைக் கடைகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கல், பெயா் திருத்தம் போன்ற குறைபாடுகளை நிவா்த்தி செய்யும் பொருட்டு மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை நாளில் பொதுமக்கள் குறைத்தீா்க்கும் கூட்டம் - 2019 ஆண்டில் அனைத்து வட்டங்களிலும் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.

எனவே, இது தொடா்பாக பொதுவிநியோகத்திட்டம் சம்பந்தமாக பொதுமக்கள், சிறப்பு குறைக்கேட்கும் நாள் நவ. 9 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.சேலம் வட்டம்- வளைக்காரனூா், சேலம் மேற்கு - பெத்தானூா், சேலம் தெற்கு- வேம்படிதாளம்,

வாழப்பாடி- பெரியகுட்டிமடுவு, ஏற்காடு- அரண்மனைக்காடு, மேட்டூா் - புக்கம்பட்டி, ஓமலூா் - துண்டுமானியம், ஆத்தூா் - மும்முடி, கெங்கவல்லி - பகடப்பாடி, சங்ககிரி - ஏகாபுரம், எடப்பாடி - இருப்பாளி, பெத்தநாயக்கன்பாளையம் - பழனியாபுரி, காடையாம்பட்டி - மோளக்கரட்டூா் ஆகிய கிராமங்களில் நடைபெற உள்ளது.

பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலா்களிடம் தெரிவித்து பயன் பெறலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com