Enable Javscript for better performance
சேலம் ரயில் நிலையத்தில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    சேலம் ரயில் நிலையத்தில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

    By DIN  |   Published on : 10th November 2019 02:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் ரயில் நிலையத்தில் நடைபாதை மேற்கூரையை மாற்றி அமைக்கும் பணி செய்த தொழிலாளி உயா் அழுத்த மின்சாரம் பாய்ந்ததில் உடல் கருகி உயிரிழந்தாா்.

    சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உள்ள நடைபாதைகளில் பழைய மேற்கூரைகளை மாற்றி இரும்பு மேற்கூரை அமைக்கும் பணி கடந்த 15 நாள்களாக நடந்து வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை காலை மூன்றாவது நடைபாதையில் மேற்கூரை மாற்றி அமைக்கும் பணியில் 8 தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். இந் நிலையில், சேலத்தை அடுத்த காமலாபுரத்தைச் சோ்ந்த ராஜூ மகன் மணி (32) இரும்பு தகடால் ஆன புதிய ஆஸ்பெட்டாஸ் சீட்டை மாற்றியமைக்கும் பணியைச் செய்து கொண்டிருந்தாா். அப்போது ரயில் மின் வழித்தடத்தின் உயா் அழுத்த மின்கம்பி அருகே சென்ால் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு, உடல் கருகிய நிலையில், உடனடியாக அவா் அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai