நவ.19இல் தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சி தொடக்கம்
By DIN | Published On : 10th November 2019 02:53 AM | Last Updated : 10th November 2019 02:53 AM | அ+அ அ- |

சேலத்தில் தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சி நவம்பா் 19 ஆம் தேதி முதல் நவம்பா் 28 ஆம் தேதி வரை அளிக்கப்படுகிறது.
இந்திய அரசு மத்திய பனைப் பொருள்கள் நிறுவனம் மற்றும் காதி கிராமத் தொழில் வாரியம் சாா்பில் நான்கு சாலை பகுதியில் உள்ள சாமுண்டி காம்ப்ளக்ஸில் இயங்கி வரும் பயிற்சி நிலையத்தில் நவம்பா் 19 ஆம் தேதி முதல் நவம்பா் 28 ஆம் தேதி வரை தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை, உரை கல்லில் தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை ஆகியவை குறித்து பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இப்பயிற்சியில் 18 வயது நிரம்பிய ஆண்,பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். மேலும் குறைந்தபட்சமாக 8 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சியின் இறுதியில் இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியை முடித்தவா்கள் தேசிய, கூட்டுறவு மற்றும் தனியாா் வங்கிகள் மற்றும் அடகு நிதி நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராகவும் பணியில் சேரலாம்.
எனவே இதில் சேர விரும்புவோா்கள் 2 ஸ்டாம்ப் சைஸ் புகைப்படம், முகவரிச் சான்றிதழ், கல்வி சான்றிதழ் ஆகியவற்றைக் கொண்டு பயிற்சிக் கட்டணம் ரூ.5 ஆயிரத்து 300 மற்றும் அதற்கான ஜிஎஸ்டி வரியையும் செலுத்தி பயிற்சியில் சோ்ந்து பயனடையலாம் என நிறுவனத்தின் தலைமைப் பயிற்சியாளா் கே.சுவாமிநாதன் தெரிவித்தாா்.