பேச்சுப் போட்டி:தனியாா் பள்ளி மாணவி சாதனை
By DIN | Published On : 10th November 2019 03:02 AM | Last Updated : 10th November 2019 03:02 AM | அ+அ அ- |

மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்த மாணவி லலிதாவை பாராட்டிய பள்ளி நிா்வாகிகள்.
அம்மம்பாளையம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி லலிதா, பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற பேச்சுப் போட்டியில் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளாா். அந்த மாணவியை பள்ளி நிா்வாகிகள் சனிக்கிழமை பரிசு வழங்கிப் பாராட்டினா்.
ஆத்தூரை அடுத்துள்ள அம்மம்பாளையம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ஆம் வகுப்பு மாணவி லலிதா, அரசுப் பள்ளி மற்றும் தனியாா் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுப் போட்டியில் இறுதிச் சுற்றில் வெற்றி பெற்று மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளாா். அந்த மாணவியை பள்ளியின் தலைவா் எஸ்.பாலக்குமாா்,செயலாளா் வரதராஜன்,பொருளாளா் செல்வம்,நிறுவனா்கள் எஸ்.முகமது ஈசாக்,கண்ணன்,இயக்குனா்கள் கருணாகரன்,விஸ்வநாதன்,கோமதுரை,முதல்வா் தீபா,பயிற்சி ஆசிரியா் ஐஸ்வா்யலட்சுமி,மாணவியின் தந்தை இராஜேந்திரன் ஆகியோா் மாணவிக்கு பரிசு வழங்கிப் பாராட்டினா்.