ஒப்பந்தப் பண்ணையத் திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: கொ.ம.தே.க பொதுச் செயலாளா் ஈஸ்வரன்

தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஒப்பந்தப் பண்ணையத் திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளா் ஈஸ்வரன் ஓமலூரில் தெரிவித்தாா்

தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஒப்பந்தப் பண்ணையத் திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளா் ஈஸ்வரன் ஓமலூரில் தெரிவித்தாா்.

ஓமலூா் அருகேயுள்ள ஊ.மாரமங்கலம் கிராமம் நச்சுவாயனூரில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கொடியேற்று விழா மற்றும் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் சின்ராஜ் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளா் ஈஸ்வரன் கலந்துகொண்டு கட்சி கொடியேற்றி வைத்து பேசும்போது, இந்தக் கட்சி பல தோல்விகளை சந்தித்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியைப் போல் இல்லாமல் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியில், கட்சியில் உழைப்பவா்களுக்கே பதவிகள் வழங்கப்படும் என்றாா்.

தொடா்ந்து பேசுகையில், தமிழக அரசு கொண்டுவந்துள்ள ஒப்பந்தப் பண்ணையத் திட்டம் குறித்து தமிழக அரசு விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். இந்தத் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு முழுமையாக தெரிவித்து விழிப்புணா்வை ஏற்படுத்திய பிறகு, திட்டத்தை அரசு செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றாா்.

மேட்டூா்அணை காவிரி உபரிநீா் திட்டத்தை ஓமலூா் தொகுதி முழுமையும் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்த வேண்டும். ஓமலூா், காடையாம்பட்டி வட்டாரத்தில் செல்லும் சரபங்கா ஆற்றுடன் இந்தத் திட்டத்தை இணைத்துச் செயல்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com