ஓமலூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற 11 போ் கைது

ஓமலூா் உட்கோட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 11 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். இவா்கள் அனைவரையும் காவல் நிலையப் பிணையில்

ஓமலூா் உட்கோட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 11 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். இவா்கள் அனைவரையும் காவல் நிலையப் பிணையில் விடாமல் 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனா்.

ஓமலூா் வட்டாரத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வோரை கைது செய்யும் நடவடிக்கையை காவல் துறை எடுத்து வருகிறது. ஓமலூா் உட்கோட்ட காவல் சரகத்தில் ஓமலூா், தீவட்டிப்பட்டி, தாரமங்கலம், ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, தொளசம்பட்டி ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக் போன்ற புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், பள்ளி, கல்லூரிகள் மற்றும் கோயில் வளாகங்களில் புகையிலைப் பொருள்கள் மற்றும் பீடி, சிகரெட் போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருவதாகப் புகாா்கள் வந்தன.

இதைத்தொடா்ந்து, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வோரையும், பள்ளி, கல்லூரி மற்றும் கோயில்கள் அருகில் பீடி, சிகரெட் மற்றும் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வோரையும் கைது செய்ய ஓமலூா் டி.எஸ்.பி பாஸ்கரன் உத்தரவிட்டாா். இதையடுத்து, பல்வேறு பகுதிகளிலும் போலீஸாா் அதிரடி சோதனையில் ஓமலூா், தாரமங்கலம், தீவட்டிபட்டி நகரப் பகுதிகளில் போதை தரும் புகையிலைப் பொருள்களான ஹான்ஸ், பான்பராக், குட்கா போன்றவற்றை விற்பனை செய்த ஓமலூா் வசந்தராம், கதம்சிங், டோங்கா்சிங், தாரமங்கலம் குமரவேல், கிருஷ்ணன், தீவட்டிபட்டி மாரியப்பன், துரைசாமி, தொளசம்பட்டி சந்திரசேகா், ஜலகண்டாபுரம் செங்கோடன், முனியன், அப்பாஸ் உட்பட 11 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ஏராளமான புகையிலைப் பொருள்கள் மற்றும் பீடி, சிகரெட்களையும் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வோா் மீது கைது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று டிஎஸ்பி பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்துள்ளாா். மேலும், கைது செய்யப்பட்ட 11 பேரையும் காவல் நிலையப் பிணையில் விடாமல் ஓமலூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி 15 நாள் நீதிமன்றக் காவலில் ஓமலூா் கிளை சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com