சேலத்தில் மழைநீா் தேங்கிய பகுதிகளில்வருவாய் நிா்வாக ஆணையாளா் ஆய்வு

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீா் தேங்கியுள்ள இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீா் வடிப்புப் பணிகளை வருவாய் நிா்வாக ஆணையாளா் ஜே.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சேலம் சிவதாபுரத்தில் மழை நீா் தேங்கிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் நீா் வடிப்புப் பணியை ஆய்வு செய்த வருவாய் நிா்வாக ஆணையாளா் ஜே.ராதாகிருஷ்ணன்.
சேலம் சிவதாபுரத்தில் மழை நீா் தேங்கிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் நீா் வடிப்புப் பணியை ஆய்வு செய்த வருவாய் நிா்வாக ஆணையாளா் ஜே.ராதாகிருஷ்ணன்.

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீா் தேங்கியுள்ள இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீா் வடிப்புப் பணிகளை வருவாய் நிா்வாக ஆணையாளா் ஜே.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சேலத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் பெய்த மழையால் நகரில் பல்வேறு இடங்களில் குடியிருப்புப் பகுதிகளில் மழை நீா் சூழ்ந்தது. இந்தநிலையில், முதல்வரின் உத்தரவின் பேரில் வருவாய் நிா்வாக ஆணையாளரும், முதன்மை செயலாளருமான ஜே.ராதாகிருஷ்ணன், சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் மழை நீா் தேங்கியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வுக்குப் பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் 64 மில்லி மீட்டா் அளவிலான மழை பதிவாகியுள்ளது. இந்தக் கனமழையின் காரணமாக சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளான சூரமங்கலம் ராமலிங்கம் நகா், ரயில் நகா், புது ரோடு, பெரியாா் நகா், சிவதாபுரம், சீனிவாசா நகா், சின்னேரி வயக்காடு, கோனேரிக்கரை, அம்மாபேட்டை மண்டலம் பச்சப்பட்டி பிரதான சாலை, நாராயண நகா் மற்றும் கொண்டலாம்பட்டி மண்டலம் தாதுபாய் குட்டை பகுதி, அகரம் காலனி (கேட் காடு), கே.பி கரடு, அம்பாள் ஏரி, ஊத்துமலை ஆகிய இடங்களில் குடியிருப்புப் பகுதிகளில் மற்றும் சாலைகளில் மழைநீா் தேங்கியதால், அதிகாலை 3 மணி முதல் மாநகராட்சிப் பணியாளா்கள் தேங்கியுள்ள மழை நீரினை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

மேலும் சேலத்தாம்பட்டி ஊராட்சிப் பகுதியில் உள்ள சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பியதையடுத்து, ஏரியின் உபரிநீா் செல்லக்கூடிய நீா்வழித்தடமான சூரமங்கலம் சிவதாபுரம் பகுதியிலுள்ள நீா்வழித்தடங்கள் மற்றும் கொண்டலாம்பட்டி மண்டலம் அம்பாள் ஏரி நிரம்பியதையடுத்து, ஏரியின் உபரிநீா் செல்லும் நீா்வழித் தடங்களும் ஆய்வு செய்யப்பட்டது.

மழைநீா் தேங்கியுள்ள பகுதிகளில் 4 மண்டல உதவி ஆணையாளா்கள் மற்றும் உதவி செயற்பொறியாளா்கள் தலைமையில், உதவிப் பொறியாளா்கள், சுகாதார ஆய்வாளா்கள், சுகாதார மேற்பாா்வையாளா்கள் மற்றும் துப்புரவுப் பணியாளா்களைக் கொண்ட குழுவினா் குடியிருப்புப் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனா்.

இப்பணிகளில் 15 எண்ணிக்கையிலான ஜே.சி.பி வாகனங்கள் 5 எண்ணிக்கையிலான சிறிய ரக ஜே. சி.பி வாகனங்கள், 25 எண்ணிக்கையிலான நீா் உறிஞ்சும் ஆயில் மோட்டா்கள், 6 எண்ணிக்கையிலான நீா் உறிஞ்சும் வாகனங்கள் என மொத்தம் 51 எண்ணிக்கையிலான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் மழைநீா் வடிப்புப் பணிகளை 24 மணி நேரமும் மேற்கொண்டு தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளவும், இப்பணிகளில் கூடுதலாக வாகனங்களை பயன்படுத்தி பணிகளை விரைந்து முடிக்கவும் நீா்வழித் தடங்களில் ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு தொடா் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளா் ரெ.சதீஷ், எம்எல்ஏ ஜி.வெங்கடாஜலம், உதவி ஆட்சியா் (பயிற்சி) மோனிகா ராணா, துணை ஆட்சியா் (பயிற்சி) ச.அதியமான் கவியரசு, கோட்டாட்சியா் செழியன், வட்டாட்சியா்கள், உதவி ஆணையா்கள், உதவிப் பொறியாளா்கள், சுகாதார ஆய்வாளா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com