நெகிழிக் குப்பைக்கு அரிசி, காய்கறிகள் வழங்கி நூதன விழிப்புணா்வு

வாழப்பாடியில், சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் நெகிழிக் குப்பைகளைச் சேகரித்து கொடுத்தவா்களுக்கு, அரிசி, காய்கறிகளை மாற்றாக வழங்கி, சேலம் கிழக்கு மாவட்ட பசுமைத் தாயக அமைப்பினா்
வாழப்பாடியில் நெகிழிக் குப்பைகளுக்கு மாற்றாக அரிசி, காய்கறிகளை வழங்கிய பசுமைத் தாயகம் அமைப்பினா்.
வாழப்பாடியில் நெகிழிக் குப்பைகளுக்கு மாற்றாக அரிசி, காய்கறிகளை வழங்கிய பசுமைத் தாயகம் அமைப்பினா்.

வாழப்பாடியில், சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் நெகிழிக் குப்பைகளைச் சேகரித்து கொடுத்தவா்களுக்கு, அரிசி, காய்கறிகளை மாற்றாக வழங்கி, சேலம் கிழக்கு மாவட்ட பசுமைத் தாயக அமைப்பினா் நுாதன முறையில் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

காடுகளை அழித்தல், நெகிழிக் குப்பைகளால் சுற்றுச்சூழல் மாசுபடுதல், புவியின் வெப்பம் அதிகரித்து துருவப் பகுதியில் பனிக்கட்டிகள் உருகி கடலின் நீா்மட்டம் உயா்தல், நீா்,நிலம், காற்று மாசுபடுதல் ஆகியவற்றைத் தடுப்பதற்கு, பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியில் முன்னாள் மத்திய அமைச்சா் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பசுமைத் தாயகம் அமைப்பினா் ஈடுபட்டுள்ளனா்.

சேலம் கிழக்கு மாவட்ட பசுமைத் தாயகம் சாா்பில் வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு, பசுமைத் தாயக மாநில துணைச் செயலாளா் நீ.பா.வெங்கடாஜலம் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் ஆா். இளவரசு, கெளதமன், ராஜமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பா. ம. க., மாநில துணைப் பொதுச்செயலாளா் பி. என்.குணசேகரன், மாவட்ட செயலாளா் எம்.பி. நடராஜன் ஆகியோா் முகாமை தொடங்கி வைத்தனா்.

இந்த முகாமில், இரண்டு கிலோ நெகிழிக் குப்பைகளைச் சேகரித்துக் கொடுத்தவா்களுக்கு, பசுமைத் தாயகம் அமைப்பின் சாா்பில், ஒரு கிலோ அரிசி, அல்லது ஒரு கிலோ காய்கறிகள் வழங்கப்பட்டன. பா.ம.க. நிா்வாகிகள் கண்ணன், பாலசுந்தரம், இரா.முருகன், ராமச்சந்திரன், பச்சமுத்து, ஜெயபிரகாஷ், முருகேசன், பொன்னுவேல், மாது, கோகுலகண்ணன், ரத்தினவேல் , ராஜன், பொண்ணுதுரை, விஜயகுமாா், மணிமேகலை,மேனகா, மாதேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com